ஆதரவு
facebookTwittergoogleplusyoutube
Select Language: தமிழ் English
  • முகப்பு
  • திட்டம் பற்றி
    • சமூகத்தின் அன்பளிப்பு
    • நூல்களுக்கான குறிப்புரை
    • மெய்ப்புப் பார்த்தல்
    • எதிர்காலப் பயன்பாடு
    • தொழில்நுட்பத்தின் பங்கு
    • வளங்கள்
    • சமூக நிகழ்வுகள்
  • குழுக்கள்
  • தொகுப்புகள்
    • உரைகள்
    • வானொலி தொகுப்புகள்
    • காணொளி தொகுப்புகள்
    • செய்தித்தாள் தொகுப்புகள்
    • புகைப்பட தொகுப்புகள்
  • த.மி.தி. நிதி

    நன்கொடையாளர்கள் பட்டியல்

    • அமைப்புகள்
    • தனிநபர் - பெரியோர்
    • தனிநபர் - மாணவர்
  • கேள்வி-பதில்
  • தொடர்பு
தமிழ் மின்மரபுடைமைத் திட்டம்பற்றி

அன்புடையீர், வணக்கம்.

இதுவரை வந்த சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியத்துக்கும் இனி வரவிருக்கும் இலக்கியத்துக்கும் சாகாவரம் அளிக்கப்போகும் மின் வளத்தை நாட்டுக்கு அன்பளிக்காக வழங்கும் நாளை நாம் நெருங்கிவிட்டோம்.

தமிழ் மின் மரபுடைமைத் திட்டத்தால் உருவாகியிருக்கும் அந்த மின் வளத்தை நாளை சனிக்கிழமை, 22 ஆகஸ்ட் 2015 அன்று, தேசிய நூலக வாரியத்தின் டிராமா செண்டரில் நடைபெறவிருக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் அலுவலக அமைச்சர் திரு எஸ். ஈஸ்வரன் இந்திய சமூகத்தின் அன்பளிப்பாகத் தர, துணைப் பிரதமர் திரு தர்மன்

சண்முகரத்னம் நாட்டின் சார்பில் பெற்றுக் கொள்ளவிருக்கிறார்.

தேசிய நூலக வாரியம், தேசிய மரபுடைமைக் கழகம், தேசியக் கலை மன்றம், சிங்கப்பூர்த் தேசியப் புத்தக மேம்பாட்டு மன்றம் ஆகிய நான்கு அரசாங்க அமைப்புகளின் தளராத ஆதரவோடு உருவாகியிருக்கிறது இந்தத் திட்டம். தமிழ் எழுத்தாளர்களும், தமிழ் ஆசிரியர்களும், தமிழ் அன்பர்களும் உதவ முன்வரவில்லையென்றால் திட்டம் தோன்றியே இருக்காது.

மக்கள் கழக பல்லிய இசைக்குழுவின் இசையோடு தொடங்கும் நாளைய நிகழ்ச்சியில், கும்மி நடனம், தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று எழுத்தாளர்கள் தங்கள் படைப்புகளின் சிறுபகுதியை மேடையில் வாசித்தல், acapella எனப்படும் மேற்கத்திய கலவை இசை போன்ற வித்தியாசமான அங்கங்கள் இடம்பெறும்.

இது வெறும் உல்லாச நிகழ்ச்சி இல்லை. ஒவ்வொரு அங்கமும், மின்வளத்தின் ஆழத்தையோ அகலத்தையோ காட்டுவதாக இருக்கும். சனிக்கிழமைக்குப் பின் எந்த அளவுக்குத் தமிழ் சமூகம் அந்த வளத்தைப் பயன்படுத்துகிறதோ அந்த அளவுக்கு இத்திட்டத்திற்காகப் பாடுபட்டோரின் உள்ளம் பூரிக்கும். அரசின் ஆதரவு இன்னும் பெருகும்.

எனவே, ஒருநாள் கொண்டாட்டத்தோடு நின்றுவிடாது, பலகாலம் இம்மின்வளத்தைப் பயன்படுத்தி தமிழ் வரலாற்றையும் பண்பாட்டையும் மொழியையும் கட்டிக் காப்போமாக!

இதுவரை எங்கள் முயற்சிக்குத் தோள்கொடுத்த அத்தனை பேருக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டு இந்த ஐந்து வார மடல் வரிசையை நிறைவுசெய்கிறோம்!

வணக்கம்!

அன்புடன்,
தமிழ் மின்மரபுடைமைத் திட்டக் குழு

முக்கிய இணைப்புகள்
முகப்பு | திட்டம் பற்றி | குழுக்கள் | தொகுப்புகள் | த.மி.தி. நிதி | கேள்வி-பதில் | தொடர்பு
FacebookTwitterGoogle PlusYou Tube
பதிப்புரிமை © 2015 தமிழ் மின்மரபுடைமைத் திட்டம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
Powered by Xsosys