ஆதரவு
facebookTwittergoogleplusyoutube
Select Language: தமிழ் English
  • முகப்பு
  • திட்டம் பற்றி
    • சமூகத்தின் அன்பளிப்பு
    • நூல்களுக்கான குறிப்புரை
    • மெய்ப்புப் பார்த்தல்
    • எதிர்காலப் பயன்பாடு
    • தொழில்நுட்பத்தின் பங்கு
    • வளங்கள்
    • சமூக நிகழ்வுகள்
  • குழுக்கள்
  • தொகுப்புகள்
    • உரைகள்
    • வானொலி தொகுப்புகள்
    • காணொளி தொகுப்புகள்
    • செய்தித்தாள் தொகுப்புகள்
    • புகைப்பட தொகுப்புகள்
  • த.மி.தி. நிதி

    நன்கொடையாளர்கள் பட்டியல்

    • அமைப்புகள்
    • தனிநபர் - பெரியோர்
    • தனிநபர் - மாணவர்
  • கேள்வி-பதில்
  • தொடர்பு
த.மி.தி. நிதி

தமிழ் மின்மரபுடைமைத் திட்டத்திற்கு நன்கொடை திரட்டுவதற்காக தமிழ் மின்மரபுடைமைத் திட்ட (த.மி.தி) நிதி தொடங்கப்பட்டுள்ளது. த.மி.தி குழுவின் சார்பில் நிதியை நிர்வகிக்க தேசிய நூலக வாரியம் உதவும். த.மி.தி குழுவின் ஆலோசனைக்கிணங்க இந்நிதி பயன்படுத்தப்படும். இந்தத் திட்டத்தின் பல்வேறு அம்சங்கள் தொடர்பான ச​மூக முயற்சிகளுக்கு ஆதரவளிக்க இந்நிதி பயன்படுத்தப்படும். உதாரணத்திற்கு, சேகரிக்கப்பட்ட நூல்களுக்குக் குறிப்புரை எழுதுவது, மின்மயமாக்கப்பட்ட நூலை மூலத்தோடு ஒப்பிடுவது, நூலாசிரியர்களிடமிருந்து உரிமைகள் பெறுவது, கையெழுத்துப் பிரதிகளைச் சேகரிப்பது போன்றவை.விருப்பமுள்ளோர் த.மி.தி நிதிக்கு காசோலை வழியாகவோ கடன்பற்று அட்டை வழியாகவோ நன்கொடை வழங்கலாம். நன்கொடை அர்த்தமுள்ளதாகவும் பயன்மிக்கதாகவும் அமையும் பொருட்டு, பெரியவர்களுக்கு 50 வெள்ளியும் மாணவர்களுக்கு 2 வெள்ளியும் குறைந்தபட்சத் தொகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

எவ்வாறு நன்கொடை வழங்கமுடியும்?

த.மி.தி நிதிக்கு நீங்கள் காசோலை வழியாகவோ கடன்பற்று அட்டை வழியாகவோ மட்டுமே நன்கொடை வழங்கலாம். நன்கொடை ஏற்றுக்கொள்ளப்பட்ட பிறகு நன்கொடையாளர்களுக்கு அதிகாரத்துவ பற்றுச்சீட்டு முறையாக அனுப்பி வைக்கப்படும். மேலும், நன்கொடையாளர் பெயர் www.singaporetamil.sgஎன்னும் த.மி.தி திட்ட இணையப்பக்கத்தில் உள்ள நன்கொடையாளர்களின் பெயர்ப் பட்டியலில் இடம்பெறும்.

காசோலைவழி நன்கொடை

காசோலைகள் “National Library Board” என்னும் பெயருக்கு எழுதப்பட வேண்டும்.அன்புகூர்ந்து நன்கொடைப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து அதனை நிரப்புங்கள்.

காசோலையின் பின்புறத்தில் “Tamil Digital Heritage Project” என்று குறிப்பிடுங்கள். பூர்த்தி செய்த படிவத்தையும் காசோலையையும் கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்பி வை​யுங்கள்:

National Library Board
100 Victoria Street
#14-01 National Library Building Singapore 188064
Attn: Catherine Lim/ Fion Fan, NLB Finance

கடன்பற்று அட்டை (credit card) வழி நன்கொடை

விசா (Visa) /மாஸ்டர்கார்ட் (Mastercard) கடன்பற்று அட்டைவழி வழங்கப்படும் நன்கொடை மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். அன்புகூர்ந்து நன்கொடைப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, அதில் கையொப்பமிடுங்கள். கையொப்பமிடப்பட்ட மூலப் படிவம் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்.நீங்கள் பூர்த்தி செய்த படிவத்தை  Sharmini_CHELLAPANDI@nlb.gov.sg  என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வை​யுங்கள்.

தமிழ் மின்மரபுடைமைத் திட்ட (த.மி.தி.) நிதி பற்றிய வழக்கமாகக் கேட்கப்படும் கேள்விகளுக்கு இங்கே பார்க்கவும்.

மேல் விவரங்களுக்குத் திருமதி மகாதேவி பாலசுந்தரத்தை devibt@gmail.com என்னும் மின்னஞ்சல்வழி தொடர்புகொள்ளலாம்.

முக்கிய இணைப்புகள்
முகப்பு | திட்டம் பற்றி | குழுக்கள் | தொகுப்புகள் | த.மி.தி. நிதி | கேள்வி-பதில் | தொடர்பு
FacebookTwitterGoogle PlusYou Tube
பதிப்புரிமை © 2015 தமிழ் மின்மரபுடைமைத் திட்டம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
Powered by Xsosys