ஆதரவு
facebookTwittergoogleplusyoutube
Select Language: தமிழ் English
  • முகப்பு
  • திட்டம் பற்றி
    • சமூகத்தின் அன்பளிப்பு
    • நூல்களுக்கான குறிப்புரை
    • மெய்ப்புப் பார்த்தல்
    • எதிர்காலப் பயன்பாடு
    • தொழில்நுட்பத்தின் பங்கு
    • வளங்கள்
    • சமூக நிகழ்வுகள்
  • குழுக்கள்
  • தொகுப்புகள்
    • உரைகள்
    • வானொலி தொகுப்புகள்
    • காணொளி தொகுப்புகள்
    • செய்தித்தாள் தொகுப்புகள்
    • புகைப்பட தொகுப்புகள்
  • த.மி.தி. நிதி

    நன்கொடையாளர்கள் பட்டியல்

    • அமைப்புகள்
    • தனிநபர் - பெரியோர்
    • தனிநபர் - மாணவர்
  • கேள்வி-பதில்
  • தொடர்பு
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
13. இத்திட்டத்திற்குத் தொண்டூழியர்கள் எத்தகைய பங்கை ஆற்றலாம்?

நூல்களை மின்வடிவமாக்கும் பணியைத் தேவையான தொழில்நுட்ப அறிவும் ஆற்றலும் உள்ளவர்கள் மேற்கொள்வர். அதற்குப் பொருத்தமானவர்களைத் தேசிய நூலக வாரியம் நியமிக்கும். எனினும், நூல்கள் மின்னாக்கம் செய்யப்பட்டதும் அவற்றை மெய்ப்புப் பார்க்கும் பணியைச் செய்யப் பல தொண்டூழியர்கள் தேவை. பிழைத் திருத்தம் கணினியில் செய்யப்பட வேண்டும். தொண்டூழியர்களுக்கு இணைய வசதி இருத்தல் அவசியம். இணையம்வழிப் பிழைத் திருத்தம் செய்வதில் அனுபவமுள்ளவர்கள் திருமதி மகாதேவி பாலாவிடம் devibt@gmail.com.என்னும் மின்னஞ்சல் மூலம் பதிவுசெய்துகொள்ள வேண்டும்.

இரண்டாவதாக, குறிப்புரை எழுதுவதிலும் உதவி தேவை (குறிப்புரை குறித்து மேலே பார்க்கவும்). குறிப்புரை எழுத விரும்புவோரும் திருமதி மகாதேவி பாலாவிடம் பெயரைப் பதிவுசெய்துகொள்ள வேண்டும். மெய்ப்புப் பார்ப்போருக்கும் குறிப்புரை எழுதுவோருக்கும் தமிழ்மொழியில் ஆற்றல் தேவை. இதில் அனுபவம் இருப்பது இன்னும் நல்லது. தமிழாசிரியர்களும் தமிழ்ப் படைப்பாளர்களும் இப்பணிக்குப் பொருத்தமானவர்களாக இருக்கக்கூடும்.

பணிகளைப் பகிர்ந்தளிக்குமுன் மெய்ப்புப் பார்ப்பவர், குறிப்புரை எழுதுபவர் ஒவ்வொருவருக்கும் தமிழ் மின்மரபுடைமைத் திட்டக்குழு முழுமையாக விளக்கம் அளிக்கும்.

14. மின்தொகுப்பு பொதுவாகக் கிடைக்கும்பட்சத்தில், எவரும் முழு நூலைப் பதிவிறக்கம் செய்து விநியோகிக்க முடியுமா?
மின்னிலக்கத் தொகுப்பு முழுவதையும் தரவிறக்கம் செய்து கொள்ள முடியும். அவற்றின் பயன்பாடு அந்தந்த நூல்களின் நிபந்தனைகளுக்கும் மதிநுட்பச்சொத்துரிமைக்கும் (Intellectual Property Right) உட்பட்டிருக்கும்.
15. தமிழ் இலக்கியப் படைப்புகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகள் திட்டத்தில்​ சேர்த்துக்கொள்ளப்படுமா?
இல்லை. த.மி.ம திட்டம் தமிழ் நூல்களில் மட்டுமே கவனம் செலுத்தும்.
16. இதுவரை பதிப்பிக்கப்படாத படைப்புகளின் நிலை என்ன? அம்மாதிரியான படைப்புகளை எழுத்தாளர்கள் இந்தத் திட்டத்திற்காக வழங்கலாமா?
தேசிய நூலக வாரியத்தின் தேர்வு விதிமுறைகளுக்கு உட்பட்டு தேர்வு செய்யப்படும் கையெழுத்துப் பிரதிகள் போன்ற இதுவரை பதிப்பிக்கப்படாத தமிழ் இலக்கியப் படைப்புகள் சேகரிக்கப்பட்டு திட்டத்தில் சேர்த்துக் கொள்ளப்படலாம். புதிய நூல்களைப் பதிப்பிப்பது தேசிய நூலக வாரியத்தின் பொறுப்புகளுக்கு அப்பாற்பட்டது. சிங்கப்பூர்த் தேசிய புத்தக மேம்பாட்டு மன்றம், தேசிய கலை மன்றம் போன்ற அமைப்புகள் புதிய நூல்களைப் பதிப்பிக்க உதவ முடியும்.
Record(s) 13 - 16 of 16  Previous 1 2
முக்கிய இணைப்புகள்
முகப்பு | திட்டம் பற்றி | குழுக்கள் | தொகுப்புகள் | த.மி.தி. நிதி | கேள்வி-பதில் | தொடர்பு
FacebookTwitterGoogle PlusYou Tube
பதிப்புரிமை © 2015 தமிழ் மின்மரபுடைமைத் திட்டம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
Powered by Xsosys